Posts

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் - பாடல் வரிகள்

Image
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல் உன் மீது பண்பாடும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் ஓ ஹோ...ஹோ.. ஓ ஹொ..ஹோ... ஓ ஹோ...ஹோ.. *** மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம் விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே.. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் *** கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது கடல்களில் உருவாகும் அலையானது விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி.. மறுவாசல் வைப்பான் இறைவன் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் இளவேனில் உன் வாசல் வந்தாடும் இளந் தென்றல்...

அமைதியான நதியினிலே ஓடும்

Image
படம்:- ஆண்டவன் கட்டளை - 1964; இசை:- விஸ்வநாதன், ராமமூர்த்தி; பாடல் வரிகள்:- கண்ணதாசன்; குரல்:- சௌந்தர்ராஜன், சுசிலா, நடிப்பு:- சிவாஜி கணேசன் & தேவிகா. அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் ஓ ஓ ஓ...... அமைதியா...

இரு பறவைகள் மலை...

Image
பாடியவர் : ஜென்சி இசை: இளையராஜா பாடல்வரிகள் : கண்ணதாசன் திரைப்படம் : நிறம் மாறாத பூக்கள் லலலாலா லாலா லலல்லலா லலலாலா லாலா லலல்லலா லலலாலா லாலா லலல்லலா லலலாலா லாலா லலல்லலா இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன இது கண்கள் சொல்லும் ரகசியம் நீ தெய்வம் தந்த அதிசயம் (இரு பறவைகள்) சாரல் தூவும் முகில்களும் சந்தம் பாடும் மலர்களும் ஆனந்த புது வெள்ள நீரோட்டமும் ஆகாயப் பூப்பந்தல் தேரோட்டமும் மானோடு கலை மானாக பார்த்தன ரசித்தன ஓராயிரமே (இரு பறவைகள்) பூவில் பொங்கும் நிறங்களே பூக்கள் ஆடும் வனங்களே எங்கெங்கும் அவர்போல நான் காண்கிறேன் அங்கங்கே எனை போல அவர் காண்கிறார் நீயென்றும் இனி நானென்றும் அழிக்கவும் பிரிக்கவும் முடியாதம்மா இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே இங்கே பறந்தன இலை மறைவினில் இரு கனிகளும் அங்கே அங்கே கனிந்தன இது கண்கள் சொல்லும் ரகசியம் நீ தெய்வம் தந்த அதிசயம் லலலாலா லாலா லலல்லலா...

இளமை என்னும் பூங்காற்று

Image
பாடல் : இளமை என்னும் பூங்காற்று படம் : பகலில் ஓர் இரவு பாடியவர்கள் : எஸ்.பி.பி. எழுதியவர் : கவியரசர் கண்ணதாசன் இசை : இசைஞானி இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் (2) ஒரே வீணை ஒரே ராகம்… 1. தன்னை மறந்து மண்ணில் விழுந்து, இளமை மலரின் மீது, கண்ணை இழந்த வண்டு, தேக சுகத்தில் கவனம், காட்டு வழியில் பயணம், கங்கை நதிக்கு மண்ணில் அணையா? – இளமை 2. அங்கம் முழுதும் பொங்கும் இளமை, இதம் பதமாய் தோன்ற, அள்ளி அணைத்த கைகள், கேட்க நினைத்தாள் மறந்தாள், கேள்வி எழும் முன் விழுந்தாள், எந்த உடலோ எந்த உறவோ? - இளமை 3. மங்கை இனமும் மன்னன் இனமும், குலம் குணமும் என்ன? தேகம் துடித்தால் கண்ணேது? கூந்தல் கலைந்த கனியே, கொஞ்சி சுவைத்த கிளியே, இந்த நிலைதான் என்ன விதியோ? - இளமை

சிந்து நதிக்கரை ஓரம்

Image
 படம் : நல்லதொரு குடும்பம் 1979 இசை :இளையராஜா  பாடல் வரிகள்:கண்ணதாசன் பாடியவர்கள் :டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் ஆடினான் தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் (சிந்து) சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடினாள் எனை பூவைப் போல சூடினாள் (சிந்து) மஞ்சள் மலர் பஞ்சணைகள் மன்மதனின் மந்திரங்கள் கொஞ்சும் குயில் மெல்லிசைகள் கோதை எந்தன் சீர்வரிசை சொல்லிக் கொடுத்தேன் கதை கதை அள்ளிக் கொடுத்தாய் அதை அதை காதல் கண்ணம்மா....... சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவி ஆடினாள் தமிழ் கீதம் பாடினான் எனை பூவைப் போல சூடினான் (சிந்து) தெள்ளு தமிழ் சிலம்புகளை அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள் கள்ளிருக்கும் கூந்தலுக்கு முல்லை மலர் நான் கொடுத்தேன் வான வெளியில் இதம் இதம் சோலை வெளியில் சுகம் சுகம் காதல் மன்னவா...(சிந்து)

கடவுள் அமைத்து வைத்த மேடை

Image
படம் : அவள் ஒரு தொடர்கதை (1974) இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் வரிகள் : கண்ணதாசன் பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை நான் ஒரு விகடகவி இன்று நான் ஒரு கதை சொல்வேன் ஓங்கிய பெரும் காடு அதில் உயர்ந்தொரு ஆலமரம் ஆலமரத்தினிலே அந்த அற்புத வனத்தினிலே ஆண்கிளி இரண்டுண்டு பெண்கிலி இரண்டுண்டு அங்கேயும் ஆசை உண்டு அதிலொரு பெண் கிளி அதனிடம் ஆண்கிளி இரண்டுக்கும் மயக்கம் உண்டு அன்பே...ஆருயிரே...என் அத்தான் கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா கொட்டும் முழக்கங்கள் கல்யாண மேளங்கள் கொண்டாட்டம் கேட்டதம்மா ஆசை விமானத்தில் ஆனந்த மேகத்தில் சீர் கொண்டு வந்ததம்மா தேன் மொழி மங்கையர் யாழிசை மீட்டிட ஊர்கோலம் போனதம்...

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

Image
படம்:இரு வல்லவர்கள் பாடியவர்கள்-டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி சுசீலா வரிகள்-கண்ணதாசன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன் நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார் உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார் உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார் உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார் நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன் பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன் உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்