சிந்து நதிக்கரை ஓரம்
படம் : நல்லதொரு குடும்பம் 1979
இசை :இளையராஜா
பாடல் வரிகள்:கண்ணதாசன்
பாடியவர்கள் :டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவன் ஆடினான்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான் (சிந்து)
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப் போல சூடினாள் (சிந்து)
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
சொல்லிக் கொடுத்தேன் கதை கதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா.......
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினான்
எனை பூவைப் போல சூடினான் (சிந்து)
தெள்ளு தமிழ் சிலம்புகளை
அள்ளி அவள் அணிந்துக் கொண்டாள்
கள்ளிருக்கும் கூந்தலுக்கு
முல்லை மலர் நான் கொடுத்தேன்
வான வெளியில் இதம் இதம்
சோலை வெளியில் சுகம் சுகம்
காதல் மன்னவா...(சிந்து)
Comments
Post a Comment