நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்

படம்:இரு வல்லவர்கள்
பாடியவர்கள்-டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி சுசீலா
வரிகள்-கண்ணதாசன்


நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்

Comments

Popular posts from this blog

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் - பாடல் வரிகள்

இளமை என்னும் பூங்காற்று

அமைதியான நதியினிலே ஓடும்